டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று திடீரென பதவி விலகினார். ஜப்பான் நாட்டில் கடந்த ஜூலையில் நடந்த நாடாளுமன்ற மேலவை தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டுதான் இஷிபா பிரதமர் பதவியேற்றார். அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அன்றாட வாழ்க்கை செலவினம் அதிகரித்துள்ளது. மக்களின் அதிருப்தியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்தது. கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றலாமா என்பது தொடர்பாக கட்சிக்குள் பெரும் விவாதம் நடந்து வந்தது. இது தொடர்பாக கட்சி எம்பிக்கள் இன்று வாக்களிக்க இருந்தனர்.இந்த நிலையில் பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று பதவி விலகினார்.
+
Advertisement