கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் எம்எல்ஏவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவருமான ஜெகன் மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப அதிமுகவினர் செயல்பட வேண்டும். அனைவரையும் ஒன்று சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். புரட்சி பாரதம் இதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. ஜனவரி மாதம் பொதுக்குழு கூடி கட்சி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை அப்போது அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
+
Advertisement