ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள துடு-பசந்த்கர், தோடாவின் பதர்வா இடையே உள்ள சியோஜ் தார் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது. அங்கு தேடுதல் நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தோடா மற்றும் உதம்பூர் ஆகிய இரு இடங்களிலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
+
Advertisement