ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாராவின் குரீ பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதி அடில் உசேன் தோக்கருக்கு சொந்தமான நிலத்தை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி ஆசிப் மக்பூல் தாருக்கு சொந்தமான பழத்தோட்டத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஆதரவு கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாக கொண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.