ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் மாயமானார்கள். ஜம்மு காஷ்மீரின் ஜோசிதி கிஷ்த்வாரில் நிலச்சரிவு இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்துள்ளனர். பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தை வெள்ளம் அடித்துச் சென்றதால் 12 பேர் வரை காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement