டெல்லி: ஜாகுவார் நிறுவனம் முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ.85 கோடியும், வாரம் ரூ.600 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி டாடா மோட்டார்சின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ரேஞ்ச் ரோவர், டிஸ்கவரி, டிஃபெண்டர் உள்ளிட்ட கார் தயாரிப்பு மற்றும் விற்பனையும் முடங்கியுள்ளது. நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் கடுமையாக பாதிக்கப்பட்டு கார் உற்பத்தி 4வது வாரமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், நிறுவன தொழில்நுட்பத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனங்கள் மூடல்
இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஜாகுவார் நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களும் பணிக்கு வரவேண்டாம் என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஜாகுவார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மீண்டும் பணி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜாகுவார்: நாளொன்றுக்கு ரூ.85 கோடி இழப்பு
ஜாகுவார் நிறுவனம் முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ.85 கோடியும், வாரம் ரூ.600 கோடியும் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் சைபர் பாதுகாப்பு மையம் உதவியுடன் தொழில்நுட்பத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சைபர் தாக்குதலில் இருந்து ஜாகுவார் நிறுவனம் மீண்டு வர சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.