Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா மூலம் பாஜகவில் நிலவும் அதிகார போட்டி அம்பலம்: தனியார் நாளிதழ்

டெல்லி: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து விலகுவது என்று ஜெகதீப் தன்கரின் திடீர் முடிவு ஒன்றிய அரசுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான உறவு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தனியார் நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆளும் பாஜவுக்குள் உள்ள அதிகார போட்டியும் இதில் அம்பலமாகி உள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. தன்கர் தனது ராஜினாமாவுக்கு உடல்நிலை காரணங்களை மேற்கோள் காட்டினாலும் ஒன்றிய அரசினுடனான மோதல் வரை ராஜினாமா நோக்கி தள்ளியதாக தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திங்கட்கிழமை நடந்த சில நிகழ்வுகளே தண்கரை ராஜினாமா சூழலுக்கு தள்ளியது தெளிவாகிறது என தனியார் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மாநிலங்களவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்திற்கான எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தீர்மானத்தை ஏற்பதாக ஜெகதீப் தன்கர் கூறியது அரசு தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியது. பதவி நீக்க தீர்மானத்தை ஒன்றிய அரசே கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில் தன்கரின் செயல் அரசுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. மேலும் அரசியலமைப்பில் மதசார்பற்ற சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகளை சேர்ப்பது குறித்து ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பியதால் ஆர்.எஸ்.எஸ்யின் கோப கனலுக்கு இலக்காக நேரிட்டது.

நீதித்துறையில் ஊழல் குறித்து குரல் கொடுத்து வந்த தன்கர் வகுப்புவாத குற்றசாட்டுகளை தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சியை ஏற்று கொண்டது பாஜக தரப்பை மேலும் ஆத்திரப்படுத்தியது என்றும் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. பதவி விலகுவதை தவிர வேறு வழி இல்லாததால் ராஜினாமா முடிவை தன்கர் எடுத்துள்ளதாகவும் இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தையையே பலவீனப்படுத்தி இருப்பதாகவும் தனியார் நாளிதழ் தெரிவித்துள்ளது.