சென்னை:விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் பொன்குமார் தலைமையில் நடந்தது. இதில், மீண்டும் விவசாய தொழிலாளர் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக பொறியாளர் எஸ்.ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுக்குழுவில் ஜெகதீசன் பேசியதாவது: தொழிலாளர் நல வாரிய வாரியத்தில் சுமார் 30 லட்சம் பேர் உறுப்பினராக பதிவாகியுள்ளனர். அந்த குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 60 லட்சம் பேர் பொன்குமார் மூலமாக நேரடியாக, மறைமுகமாக பயனடைகின்றனர். இந்த 60 லட்சம் பேரையும் ஓட்டுக்களாக மாற்ற வேண்டியது நிர்வாகிகள் கடமை. வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்குமாரை தமிழகத்தில் எந்த தொகுதியில் நிற்க வைத்தாலும் அவரை வெற்றி பெறச் செய்ய களப்பணி ஆற்றிட நிர்வாகிகள் தயாராகிவிட வேண்டும்.
+
Advertisement