Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 7-ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in -ல் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ-களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், 136 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.