ரோம்: இத்தாலியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இத்தாலியின் க்ரோசெட்டோவில் உள்ள ஆரேலியா சாலையில் ஆசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வேனும், மினி பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரும் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement