Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரோவின் மூன்று பெரிய திட்டங்களுக்கு பேருதவியாகும் சுக்லா: 2035 இந்திய விண்வெளி மைய திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்

பெங்களூரு: சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மூலம் இஸ்ரோவின் மூன்று பெரிய திட்டங்களுக்கு பேருதவியாக அமைத்துள்ளார். இந்தியா விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது 20 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு ஜூலை 15ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவருக்காக இஸ்ரோ ரூ.550 கோடி செலவில் மேற்கொண்ட ஆக்சியம் 4 பயணம் இப்போது மூன்று முக்கிய திட்டங்களுக்கான அடித்தளம் ஆகும் என விஞ்ஞானிகள் உறுதி கூறுகின்றனர்.

மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டம், 2035ல் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் சொந்த விண்வெளி ஆய்வு மையம் மற்றும் விண்வெளியில் பயிர் முளைக்க வைப்பது, பாக்டீரியா செயல்பாடுகள், மனித மூளை மாற்றங்கள் ஆகியவற்றிற்கு சுக்லாவின் அனுபவங்கள் மற்றும் ஆய்வுகள் பயனளிக்கின்றன. இது தொடர்பாக அவர் விண்வெளியில் 7 அறிவியல் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்து உள்ளார். மருத்துவ கண்காணிப்பில் ஒரு மாதம் இருக்கும் சுக்லா அதன்பின் ககன்யான் திட்டத்தின் அறிவியல் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இவர் தரவுகள் மற்றும் அனுபவங்களை கொண்டு இஸ்ரோ விரிவான செயல் திட்டங்களில் மாற்றம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் முதலீடு வீணாகவில்லை, மாறாக ஒரு வீரரின் மூலமாக மூன்று தேசிய திட்டங்களுக்கு பயன்தரும் வகையில் செயல்படுகிறது. இதனால் சுபான்ஷு சுக்லா இந்தியா விண்வெளி வரலாற்றில் முக்கிய துவக்க புள்ளியாகவே பார்க்கப்படுகிறார்.