ஜெருசலேம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அக்டோபர் 10ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 23 பிணை கைதிகளின் சடலங்களை விடுவித்துள்ளனர். இன்னும் 5 பேரின் சடலங்கள் காசாவில் உள்ளன. இதுவரை இஸ்ரேல் 285 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு காசாவில் இருந்து அனுப்பப்பட்டது இஸ்ரேலியரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை காசாவிற்கு அனுப்பியது. 69169 பாலஸ்தீனியர்கள் பலி: காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 69169 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 170685 பேர் காயமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement

