சென்னை: கோவை ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சிவஞானன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் மனுதாரர் தாக்கல் செய்த, மற்றொரு வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அறிக்கை அடிப்படையில் கடந்த பிப்ரவரியில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
+
Advertisement