சென்னை: ஈஷா மையத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா மையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஏற்பாடு செய்யாமல் விழாக்கள் நடத்த தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் தனது விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக சிவஞானம் வழக்கு தொடர்ந்திருந்தார்.கால்நடைகள், மக்களுக்கு பாதிப்பு, நிலத்தடி நீர் மாசடைவதாகவும் சிவஞானம் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் ஒலி அளவு உள்ளது என ஈஷா மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement