வங்கதேசம்: வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்ட்ரிலிங் 60, கேட் 59 ரன்கள் எடுத்தனர். வங்கதேச தரப்பில் மிராஜ் 3 விக்கெட், ஹாசன், இஸ்லாம், முரத் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய வங்கதேச அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. ஹாசன் ஜாய் 169 ரன், மொமினுல் 80 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 52 ரன் முன்னிலையுடன் வங்கதேச அணி 3வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்கிறது.
+
Advertisement
