பாக்தாத்: ஈராக்கில் 4 ஆண்டுக்கு பிறகு நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலை செல்வாக்கு மிக்க சதரிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் மொத்தம் 8703 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
மொத்தம் 3.2 கோடி தகுதியுள்ள வாக்காளர்களின் 2.14 கோடி பேர் மட்டுமே தங்களது தகவல்களை புதுப்பித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுள்ளனர். கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
