புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ஈரானுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு அவர்களின் விடுதலைக்காக அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பணம் கேட்டு மிரட்டப்படுகின்றனர்.
எனவே இந்திய குடிமக்களும் கடுமையான விழிப்புணர்வை கடைப்பிடிக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஈரான் அரசு சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே விசா இல்லாமல் நுழைவதற்கு அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.