வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத் துறை இந்த தடைகளை அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் கூட்டாக கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவியுள்ளன. இது ஈரானிய ஆட்சிக்கும் அமெரிக்காவை அச்சுறுத்தும் தீவிரவாத குழுக்களுக்கு அதன் ஆதரவிற்கும் முக்கியமான வருவாயை வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஈரானின் எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்தவர்களில் இந்தியாவை சேர்ந்த வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா ஆகியோர் அடங்குவர். இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் காஸ் ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் சீனா, பாகிஸ்தானுக்கு ஈரானில் இருந்து காஸ் ஏற்றுமதி செய்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
+
Advertisement