சென்னை: அறிக்கை தாக்கல் செய்ய தவறிய 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில் டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2017 முதல் இதுவரை குள்ளஞ்சாவடி ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கைதர வேண்டும். புகாரை விசாரித்த குற்றப்பத்திரிகையோ, அறிக்கையோ தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
+
Advertisement