டெல்லி : இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டியின் மீதப்போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல், இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டு வீரர்கள் அனைவரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லி அழைத்து வரப்பட உள்ளனர். மேலும் இதுவரை 57 போட்டிகள் முடிந்துள்ளன; மீதமுள்ள போட்டிகள் குறித்து நாளை முடிவு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement