Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்..!!

வாஷிங்டன்: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில் ஐபோன் 17, 17 ஏர், 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஐபோன்கள் வெளியாகும் போதெல்லாம் அதன் கேமரா மடல்கள் கவனம் பெரும் இந்த முறை ஐபோன் 17 மாடல் இரட்டை கேமராவும் 17 ஏர் மாடல் ஒற்றை கேமராவையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் 3 கேமராக்கள் உள்ளன.

ஐபோன் 17 மடலில் 6.3 இன்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 48 மெகா பிக்ஸல் மெயின் கேமரா மற்றும் 12 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 17 மாடல் கருப்பு,வெள்ளை, ஸ்டீல், ப்ளூ, பச்சை, ஊதா ஆகிய நிறங்களில் கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹேர் மாடல் ஐபோன்களிலேயே மிகவும் மெல்லிய போன் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. 6.5 இன்ச் திரை கொண்ட ஐபோனின் பின்பக்கம் 48 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஹேர் மாடலில் மற்ற போன்களை போல தனியாக சிம்கார்டுகள் செலுத்த முடியாது எனவும் இ-சிம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐபோன் 17 ஏர் மாடல் கருப்பு, வெள்ளை, லைட் கோல்டு மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய 4 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களை கேமராக்களில் 8X வரை ஆப்டிக்கல்ஸ் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தூரத்தில் இருக்கும் பொருளை கூட துல்லியமாக படம் பிடிக்க முடியும். இந்த இரு போன்களிலும் 8K தூரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். 2 மாடல்களிலும் அதிவேக இணைப்பு வசதிக்காக WIFI 7 சிப் பொறுத்த பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்கள் நீளம், ஆரஞ்ச் மற்றும் சில்வர் ஆகிய 3 நிறங்களில் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 மாடல் ரூ.82,990 ஆகவும், ஐபோன் 17 ஏர் ரூ.1,20,000 ஆகவும் விலை நிர்ணயிக்கபட்டுள்ளது. இதே ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஐபோன் ப்ரோ ரூ.1,34,990க்கும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ.1,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல்களில் முன்பதிவு வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கும் எனவும் செப்டம்பர் 19ம் தேதி முதல் விற்பனைக்கு போன்கள் கிடைக்கும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.