சென்னை: பாமக சார்பில் திமுக அரசின் முதலீடுகளை விமர்சிக்கும் ஆவணம் வெளியீட்டு விழா எழும்பூரில் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி ஆவணத்தை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 2025 செப். வரை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் 1059, ஒப்பந்தங்களின் மதிப்பு 11.32 லட்சம் கோடி, வேலை 34 லட்சம். ஆனால் உண்மை நிலை 1000 கோடிக்கு மேலான ஒப்பந்தங்களில் ஒன்று கூட முழுமையாக செயல்பாட்டு வரவில்லை. 130 ஒப்பந்தங்களில் பாதிக்கும் மேல் ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்கம் மட்டுமே. அவை புது முதலீடு அல்ல. இதுவரை 8 அமைச்சரவை கூட்டம் மூலம் 1.56 லட்சம் கோடி முதலீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளனர். பிறகு எப்படி 11.32 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும்? முதலீடு ஈர்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்றார்.
+
Advertisement


