சென்னை: பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர் நீதிமன்ற உத்தரவின்படி நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பி லிமிடட் மற்றும் துணை நிறுவனங்களில் (1 +44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு, இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் வரும் 8.10.2025க்குள் காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப்பிரிவு, நியோமேக்ஸ் (எஸ்ஐடி), சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பேருந்து நிலையம் அருகே, மதுரை-625017 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். வெளிநாட்டிலோ அல்லது தொலைவிலோ இருப்பின் eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் தரலாம்.
+
Advertisement