ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை: 5 வருடங்களில் ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. "ஒவ்வொரு மறுமுதலீடும் தமிழ்நாடு இந்தியாவின் தொழில்துறைத் தலைவராகவும், புதுமை மற்றும் வளர்ச்சிக்கான நம்பகமான உலகளாவிய கூட்டாளியாகவும் இருப்பதைக் காட்டுகிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.