Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.2,000 கோடி முதலீடு செய்யும் ஹிட்டாச்சி நிறுவனம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: 5 வருடங்களில் ரூ.2,000 கோடி முதலீடு மற்றும் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (15.10.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 5 வருடங்களில், 2000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம்;

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய ஃபார்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றானது, ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, போரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம். தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 5 வருடங்களில், 2000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர். நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.