விசாரணையின்போது காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளான 4 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தர மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: விசாரணையின்போது காவல்நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளான 4 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு தர ஆணை தமிழ்நாடு அர சுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 'விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவர்களை தாக்கியது மனித உரிமை மீறல்' மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. கொடுங்கையூர் சாலையில் நின்று கொண்டிருந்தவரிடம் லேப் டாப்பை பறித்துச் சென்ற 4 சிறுவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த குணசேகரன் 4 சிறுவர்களை சித்ரவதை செய்து தாக்கியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.


