Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6G ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் எப்போது? அசத்தல் ப்டேட்..!

நாட்டில் 5G சகாப்தம் மிக வேகமாக தொடங்கியுள்ள நிலையில், மில்லியன் கணக்கான டிவைஸ்கள் தற்போது 5G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்கின்றன. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் புதிய நெட்வொர்க்கை ஏற்றுக்கொள்ளும் வேகம் என்பது பெரும்பாலானவர்கள் நினைத்ததைவிட விரைவாகவே உள்ளது. இப்போது, ​​அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரவிருக்கும் 6G எனப்படும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் டெக்னாலஜி பற்றி பேச வேண்டிய நேரம் இது. மேலும், முதல் முறையாக 6G நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும் டிவைஸ்கள் மார்க்கெட்டில் எப்போது கிடைக்கும் என்பதற்கான தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 6G டிவைஸ்கள் அறிமுகமாகும் என்பதற்கான தோராயமான தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 6G போன்கள் குவால்காம் நிறுவனம் 6G டிவைஸ்களை 2028ம் ஆண்டிற்குள் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 6ஜி கிட்டத்தட்ட இன்னும் இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் ஆகும். இவை மார்க்கெட்-ரெடி ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் அநேகமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 6G நெட்வொர்க்குகளை சோதனை செய்ய அவை அனுமதிக்கும். உண்மையான 6G நெட்வொர்க் அறிமுகத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். பெரும்பாலான நாடுகள் 2030ம் ஆண்டில் 6G நெட்வொர்க்கை முழுமையாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்பிறகே ஆப்பிள், ஒன் பிளஸ் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளின் வணிக ரீதியான 6G ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் கிடைக்கும்.

5G நெட்வொர்க் அறிமுகம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 6G அறிமுகத்திற்கு பெரியளவில் தயாராகி வருகிறது. 5G-யுடன் ஒப்பிடும்போது, ​​வரவிருக்கும் புதிய 6G நெட்வொர்க் 100 மடங்கு வேகமாகவும், டேட்டா ஸ்பீடு உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் AI சுற்றுச்சூழல் அமைப்புக்கு இது மிகவும் முக்கியமானது. இதன் பொருள், நெட்வொர்க்கில் உள்ள 6G போன்களில் அதிகமாக காணப்படும் இணைய வேகம், 3D-பவர்ட் கேமிங் மற்றும் பிற பணிகளை மிகவும் பிரபலமாக்க கூடும். நெட்வொர்க்கை பெரிதாக சிரமப்படுத்தாமல் பெரிய அளவிலான டேட்டாவை கையாளும் திறன் 6G-யின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியா 6G தொழில்நுட்பத்திற்கான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது.

மேலும், அதன் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பயன்பாட்டில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டுள்ளது. 5G-யுடன் ஒப்பிடும்போது, ​​வரவிருக்கும் புதிய 6G நெட்வொர்க் 100 மடங்கு வேகமாகவும், டேட்டா ஸ்பீடு உடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.