சென்னை: என்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 21ம் தேதி நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு, ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகைத் தேர்வு வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 10ம் தேதி மற்றும் 17ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதள www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.