Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யுனெஸ்கோ வழங்கும் இன்டெர்ன்ஷிப் பயிற்சி

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) தன் தலைமையகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தொழில்முனைவோருக்காக ‘இன்டெர்ன்ஷிப்’(Internship) பயிற்சி திட்டம் நடத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம், பங்கேற்பாளர்கள் சர்வதேச அமைப்பின் பணிமுறைகள், திட்டங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்கான முயற்சிகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதற்கு, https://careers.unesco.org என்ற இணையதளம் மூலம் டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 20 வயது நிரம்பியவராகவும், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் எழுதும் மற்றும் பேசும் திறனுடன் பட்ட மேற்படிப்பு, முனைவர் அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினி தொடர்பான திறன்களும், குழு நிர்வாகப் பண்பும் அவசியம்.

ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை, யுனெஸ்கோவின் உத்தரவுகள், திட்டங்கள், தொழில்நுட்பத் திறன்கள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி மற்றும் பயணங்களுக்கு உதவித்தொகையோ, பயிற்சி முடித்தபின் பணி வாய்ப்பையோ யுனெஸ்கோ வழங்காது. ஆனால், உலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள், கல்வி, தகவல் தொழில்நுட்பம், கலாசாரம், சமூக வளர்ச்சி போன்ற பல துறைகளில் அனுபவம் பெறுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சர்வதேச சூழலில் பணிபுரியும் அனுபவம், உலகளாவிய நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்.