அதிக அளவிலான இணைய சேவை கட்டணத்தை வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கு ஒரு எம்பிபிஎஸ் பயன்பாட்டிற்கு ரூ.382.75 வசூலிக்கப்படுகிறது. இப்பட்டியலில் 2ம் இடத்தில உள்ள கானாவில் ரூ.229.12 காசுகள் கட்டணமாக உள்ளது. 3வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்து ரூ.183.83 காசுகள் கட்டணமாக உள்ளது.
4ம் இடத்தில் கென்யா, 5வது இடத்தில் மொராக்கோ, 6 வது இடத்தில் ஆஸ்திரேலியா,7 வது இடத்தில் ஜெர்மனி, 8ம் இடத்தில் நைஜிரியா, 9 ம் இடத்தில் கனடா உள்ளது. 10ம் இடத்தில் உள்ள பாகிஸ்தானில் ஒரு எம்பிபிஎஸ் கானா கட்டணம் ரூ.47.07 காசுகளாக உள்ளது பிற நாடுகளை ஒப்பிடுகையில் மிக குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் இந்தியாவில் ஒரு எம்பிபிஎஸ் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.7.10 காசுகளாகும். அந்த வகையில் மிக குறைந்த கட்டணம் வசூலிக்கும் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.