Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சர்வதேச மகளிர் சென்னை ஓபன் 2025 முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து: நேற்றைய போட்டிகள் இன்று நடக்கிறது

சென்னை: சர்வதேச மகளிர் சென்னை ஓபன் 2025 முதல் நாள் போட்டிகள் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்டன. சென்னையில், பெண்களுக்கான ‘டபிள்யுடிஏ 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் தொடக்க நாள் ஆட்டம் நேற்று பெய்த சாரல் மழையால் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, நேற்று நடக்க வேண்டிய போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் முதல் சுற்றின் மொத்தமுள்ள 16 ஒற்றையர் போட்டிகளும் இன்று நடத்தப்படும். ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்க உள்ளது. இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் புதன்கிழமை முதல் தொடங்கும்.

இன்று, துருக்கியைச் சேர்ந்த முதல் நிலை வீராங்கனை ஸெய்னெப் ஸோன்மெஸ், டயானா புரோசோரோவாவை எதிர்த்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவார். இவரைத் தொடர்ந்து, மூன்றாம் நிலை வீராங்கனை மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற டோனா வெகிக், இந்தியாவின் வைஷ்ணவி அட்கரை எதிர்கொள்கிறார். இந்திய ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும், இந்திய வீராங்கனைகள் வல்லி பாமிடிபாட்டி- 16 வயதான மாயா ராஜேஷ்வரன் ரேவதி மோதும் போட்டி, மூன்றாவது ஆட்டமாக நடைபெறும். பிற்பகுதியில், 2022 சென்னை ஓபன் சாம்பியனான லிண்டா ஃப்ருஹ்விர்தோவா, தகுதிச் சுற்று வீராங்கனை ஆஸ்ட்ரிட் லெவ் யான் ஃபூனை எதிர்த்து தனது பயணத்தைத் தொடங்குகிறார்.