டோக்கியோ: ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஷிகரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இஷிபா விலகினார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வரும் 15ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் நடந்த உள்கட்சி வாக்கெடுப்பில் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே தகாய்ச்சியும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்ஜூமிக்கும் போட்டியிட்டனர். இதில் 295 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வாக்களித்தனர். இதில் 64 வயதான சனே தகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.