சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரும்பும் பதவிகளுக்கு https:chennai.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வருகிற 21ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

