சென்னை: போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், போலி இன்சூரன்ஸ் மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளது என்றார்.
இதை கேட்ட நீதிபதி, தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக 467 புகார்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே இந்த புகார்கள் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும். அந்த வழக்கை உடனடியாக விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும்என்று உத்தரவிட்டார்.