சென்னை: தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ அரசின் திட்டங்கள்தான் காரணம் என சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளி நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் "ஏராளமான போராட்டங்களுக்கு பிறகே மறுக்கப்பட்ட கல்வியின் கதவுகள் திறக்கப்பட்டன.நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மை மக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் மத நல்லிணகத்தை கெடுக்க நினைக்கும் கூட்டம் நெடுநாள் இருக்காது. இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இன்ஸ்டாவில் ரோல் மாடலை தேட வேண்டாம்.. Like-ல் ஒன்றும் கெத்து இல்லை" எனவும் முதலமைச்சர் பேசினார்.
+
Advertisement