*தொழிற்சங்கம் வலியுறுத்தல்
நாகப்பட்டினம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை விழிப்புணர்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது.துணைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். அமைப்பு செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் காமராஜ் பேசினார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஓட்டுநர்களுக்கு ஐஆர்டி மூலம் பயிற்சி அளித்த பின்னரே தடத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும். சட்டஞானம் இல்லாத பொதுமேலாளர்களை கண்டறிந்து புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், பாலச்சந்தர், குமரவேல், ராஜா, பாஸ்கர், பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.

