அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியிருப்பது நீதியை எடுத்துக் காட்டிருப்பது மட்டுமின்றி இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதாகும். தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும் வகையில் இந்தியா கூட்டணிக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாகவும் தீர்ப்பு அமைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.