ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழில் சங்கதினர் போராட்டம்: மதுரையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற தொழிலாளர்கள்
மதுரை : ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து இன்று இந்திய முழுவதும் அனைத்து மாநிலகள் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டக்கள் அனைத்து தொழில் சங்கம் சார்பாக நடத்திவருகின்றனர். குறிப்பாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு எதிராக பேரணியாக வந்து தற்போது மதுரை ரயில்நிலையம்முன்பாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறிப்பாக இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசின் தொழிலாளர் சங்கத்தினர் தவிர மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கமும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கிட்டதட்ட 1000 திற்கு மேற்பட்டோர் தற்போது மதுரை ரயில்நிலையம் எதிரே ஒன்றிய அரசிற்கு எதிரான பொது துறை நிர்வணக்களை தனியார் மையப்படுத்துவதை எதிர்த்து, தொழிலாளர் நலச்சட்டத்தை மாற்றுவது எதிர்த்து இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 20 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள். விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் சேர்த்து மத்திய தொழில்சங்ககளை அறைகூவலை ஏற்று
வங்கி, LIC, துறையில் அனைத்துஊழியர்களும், அதிகாரிகளும் சேர்த்து இன்றைக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளன .