இந்தோனேசியா: தலாவுத் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைக்க கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகரை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் குழந்தைகள்280 பேருடன் சென்ற சொகுசு கப்பல் வடக்கு சுலவேசியில் உள்ள தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கப்பலின் மற்றப் பகுதிகளுக்கு மளமளவெனப் பரவி கப்பல் முழுவதுமாக தீபற்றி எரியத் தொடங்கியது.
தீயை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் தப்பிக்க உடனடியாக கடலில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலோர் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். ஆனால் சில பயணிகள் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் குதித்தனர்.
அருகிலுள்ள டெல்லிஸ் தீவைக் கடந்து செல்லும் பல மீன்பிடி படகுகள் சில உயிர் பிழைத்த பயணிகளை தண்ணீரிலிருந்து மீட்டு தங்கள் படகுகளில் கரைக்கு கொண்டு வந்தன. இதனையடுத்து கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே இந்த மீட்புப் பணிகள் முற்றிலுமாக முடிந்த பிறகே இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா? எனத் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.