Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலை மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்​திரா காந்தி தேசிய திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் (இக்னோ), சென்னை மண்டல முது​நிலை இயக்​குநர் பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ தொலை​தூரக் கல்வி திட்​டத்தின் வாயி​லாக பல்​வேறு பாடப் பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது. 2025 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி முடிவடைந்த நிலை​யில், மாணவர்கள் நலனை கருத்​தில் கொண்டு, கடைசி தேதி வரும் 30 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, செமஸ்டர் படிப்புகள் மற்றும் சான்​றிதழ் படிப்​பு​கள் தவிர மற்ற அனைத்து வகை இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ படிப்​பு​களிலும் மாணவர்​கள் செப்.30 வரை சேரலாம். தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணை​யதள இணைப்பை பயன்​படுத்தி விண்ணப்​பிக்க வேண்​டும். மாணவர் சேர்க்கை தொடர்​பான கூடு​தல் விவரங்​களை இக்னோ இணை​யதளத்​தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்​ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரம் பெறலாம். இக்னோவில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.