வாரணாசி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை ஒன்றிய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வாரணாசியில் கொடியசைத்து அதன் வணிக செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் சோனோவால் கூறுகையில், ‘‘ இதுவெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல. பசுமை ஆற்றல் மற்றும் பசுமை உள்நாட்டு தீர்வுகளை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறோம் என்பதற்கான ஒரு அறிகுறியாகும்” என்றார்.
+
Advertisement


