Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம்

பெங்களுரு: இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனம் IISC, விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து இக்காரை உருவாகியுள்ளது. விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் இயக்கப்பட்டது

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல், ஏ.டி.எம். இட்லி கடை, ஓட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோ, தோசை சுடும் ரோபோ, வீட்டு வேலைகளுக்கு ரோபோ பயன்பாடு என பெங்களூரு இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து வருகிறது என்றால் மிகையல்ல.

அந்த வரிசையில் தற்போது டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம் பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் தான் இந்த டிரைவர் இல்லாத தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.

ஆர்.வி. பொறியியல் கல்லூரிக்கு சென்ற ஆன்மீகத் தலைவர் உத்தராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார். ஓட்டுநர் இல்லாத கார் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்றும் அடுத்த சில மாதங்களில் இந்த கார் முறையாக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அறிவியல் நிறுவனம், விப்ரோ மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்டோபர் 27, 2025 அன்று பெங்களூருவில் உள்ள ஆர்.வி. கல்லூரியில், WIRIN ஒத்துழைப்பின் கீழ் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி வாகன முன்மாதிரியை அறிமுகப்படுத்தினர்.

விலையுயர்ந்த லிடாரை நம்பாமல், பள்ளங்கள் மற்றும் ஒழுங்கற்ற போக்குவரத்து போன்ற இந்தியாவின் சாலை சவால்களைக் கையாள இந்த வாகனம் மலிவு விலையில் இயந்திர கற்றல், கேமராக்கள் மற்றும் சென்சார்களைப் பயன்படுத்துகிறது. மதிப்பிற்குரிய முனிவர் ஸ்ரீ ஸ்ரீ 1008 சத்யாத்ம தீர்த்த ஸ்ரீபாதங்களு முன்மாதிரியில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்யும் ஒரு வைரல் வீடியோ, பாரம்பரியம் மற்றும் புதுமையின் கலவையை எடுத்துக்காட்டுகிறது, வடிவமைப்பு குறித்த விமர்சனங்களுடன் உள்நாட்டு முயற்சிகளுக்கு பாராட்டுக்களையும் உருவாக்குகிறது.