Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அணி அறிவிப்பு: ஹேமலதா தேர்வு

மும்பை: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீராங்கனை ஹேமலதா தயாளன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற இருந்த இந்த தொடர் (அக்.3 - 20) அங்கு நிலவும் கலவர சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டதுடன், புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில இருந்து ஹேமலதா தயாளன் வாய்ப்பு பெற்றுள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்பாக காயத்தால் விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஷ்ரேயங்கா, யஸ்டிகா உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ரிச்சா கோஷ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்கள்), ஹேமலதா தயாளன், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாகூர், ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.

உடன் பயணிக்கும் மாற்று வீராங்கனைகள்: உமா செட்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்.

காத்திருப்பு வீராங்கனைகள்: ராக்வி பிஸ்ட், பிரியா மிஸ்ரா.