புதுடெல்லி: கடந்த ஜூலை 7ம் தேதி செங்கடலில் சென்று கொண்டிருந்த எம்.வி.எட்டர்னிட்டி சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தினர். கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் 4 பேர் பலியானார்கள். தண்ணீரில் தத்தளித்த ஒரு இந்தியர் உட்பட 10 மாலுமிகளை ஐரோப்பிய ஒன்றிய கடற்படை மீட்டது. கேரளாவை சேர்ந்த அனில் குமார் ரவீந்திரன் உட்பட 11 பேரை ஹவுதி படையினர் சிறைபிடித்தனர். இந்திய மாலுமியை மீட்பதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், அனில் குமார் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அவர் மஸ்கட் வந்து சேர்ந்தார். கேரளா, காயங்குளத்தை சேர்ந்த அனில்குமார் முன்னாள் ராணுவ வீரர். அனில் குமார் விடுதலையில் உதவி செய்ததற்காக ஓமன் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
+
Advertisement

