இந்திய கிரிக்கெட் வீராங்கனை சுவாரஸ்ய கேள்வி: எப்பவுமே பளபளன்னு இருக்கீங்களே எப்படி வெட்கத்துடன் சிரித்த மோடி ?
டெல்லி: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியினர், நேற்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது ஒவ்வொருவரும் பிரதமர் மோடியிடம் சுவாரஸ்ய கேள்விகளை எழுப்பினர். இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹர்லீன் தியோல், எப்படி உங்கள் முகம் இவ்வளவு பிரகாசமாகவும், பொலிவாகவும் இருக்கிறது. உங்கள் தினசரி சரும பராமரிப்பு என்ன? என்று பிரதமர் மோடியிடம் கேட்டார். இந்த கேள்வியால் அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். இதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட்டு சிரித்தப்படி, ‘நான் இதுபோன்ற விஷயங்களில் ஒருபோதும் கவனம் செலுத்தியதில்லை. நாட்டு மக்கலின் அன்புதான் இதற்கு காரணம்’ என்றார். உரையாடலின்போது, தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவிடம் சென்ற பிரதமர் மோடி, அவரின் அனுமன் டாட்டூ வைரலானது குறித்து கேட்டார்.
