Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய ராணுவத்திற்கு விற்பனை 300 கி.மீ. வேகத்தில் இலக்கை அடைந்து தாக்கும் ட்ரோன்: இன்ஜினியரிங் மாணவர்கள் அசத்தல்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் பிலானி (பிஐடிஎஸ்) கல்லூரியில் இயந்திர பொறியல் படிக்கும் மாணவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த ஜெயந்த் காத்ரி(20), கொல்கத்தாவை சேர்ந்த மின் பொறியியல் மாணவர் சவுரியா சவுத்ரி(20). விடுதி அறையில் தங்கி படிக்கும் நண்பர்களான இவர்கள் அப்போலியன் டைனமிக்ஸ்’ என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கி உள்ளனர். பின்னர் 2 மாதங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன்களை உருவாக்கினர்.

தொடர்ந்து இந்திய ராணுவம் தேவையான டிரோன்களை தயாரிக்க ஆர்டர்களை வழங்கி உள்ளது. அதன்படி இந்திய ராணுவத்திற்கு டிரோன்களை விற்று நாட்டின் பாதுகாப்பின் ஒரு பகுதியாக மாறினர். ஜம்மு, சண்டிகர், வங்காளத்தில் பனகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவப் பிரிவுகள் ஏற்கனவே இவர்கள் ட்ரோன்களை வாங்கியுள்ளன. இதுகுறித்து ஜெயந்த் காத்ரி மற்றும் சவுரியா சவுத்ரி ஆகியோர் கூறியதாவது:

இறக்குமதி செய்யப்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் சார்ந்திருப்பதைக் குறைப்பதே எங்கள் குறிக்கோள். பொதுவான கூறுகளுடன் டிரோன்களை உருவாக்கி, இந்திய நிலப்பரப்புக்கு ஏற்றவாறு அமைப்புகளை மாற்றியமைத்தோம். பின்னர், ராணுவ அதிகாரிகளுக்கு எங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினோம். இதனை ஒரு ராணுவ கர்னல் பார்த்து டெமோவுக்காக சண்டிகருக்கு அழைத்தார்.

சண்டிகரில் குண்டுகளை வீசக்கூடிய பந்தய டிரோன்களின் நேரடி டெமோ நடத்தப்பட்டபோது, எங்களின் டிரோன்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டன. இதுவே இந்திய ராணுவத்தின் ஆர்டர்களில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இந்த டிரோன் மணிக்கு 300 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. இது வழக்கமான டிரோன்களை விட 5 மடங்கு அதிகம். மேலும் 1 கிலோ எடையுள்ள பொருட்களுடன் ட்ரோன்கள் வேகமாகப் பயணிப்பது மட்டுமல்லாமல், ரேடார்களிடம் சிக்காமல் பயணித்து மிகத் துல்லியமாக குறிவைத்த இடத்திற்கு செல்லும் என்றனர்.