Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி.20 போட்டி; 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றி அசத்தல்

மான்செஸ்டர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் டி.20 தொடரில் முதல் 2 போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 3வது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் 4வது போட்டி நேற்றிரவு மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்தது. இந்திய பவுலிங்கில் ராதா யாதவ், சரணி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 32, ஷபாலி வர்மா 19 பந்தில் 31, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 26 ரன் அடித்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் நாட் அவுட்டாக 24 ரன் எடுத்தார். 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 3-1 என தொடரையும் கைப்பற்றியது. ராதா யாதவ் ஆட்டநாயகி விருது பெற்றார். 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி பர்மிங்காமில் நாளை மறுநாள் நடக்கிறது.