தெஹ்ரான்: இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு ஈரான் அனுமதி அளித்து இருந்தது. அதன்பிறகு மோசடி, கடத்தல் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணத்தை ஈரான் திடீரென தடை செய்துள்ளது. குறிப்பாக கடந்த மே மாதம், சட்டவிரோத பாதை வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ஈரானில் கடத்தப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஈரானிய அதிகாரிகள் தலையிடுமாறு இந்தியா வலியுறுத்தியதை அடுத்து, மூன்று பேரும் மீட்கப்பட்டனர். இதையடுத்து சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் விசா தள்ளுபடி வசதியை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.
+
Advertisement


