புதுடெல்லி: ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த வைரஸ் தொற்றுகளை அடையாளம் காணும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள ஆய்வகங்கள் மூலம் மொத்தம் 4.5 லட்சம் நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்,9 பேரில் ஒருவருக்கு வைரஸ் நோய் கிருமிகள் கண்டறியப்பட்டன.
முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 10.7 % இருந்த தொற்று விகிதம், இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 11.5 % உயர்ந்து, 0.8 % புள்ளி அதிகரிப்பை குறிக்கிறது. இன்ப்ளூயன்ஸா, கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த கசிவு நோயாளிகளில் டெங்கு வைரஸ் ,மஞ்சள் காமாலை நோயாளிகளில் ஹெபடைடிஸ், கடுமையான வயிற்று போக்கு நோயாளிகளில் நோரோ வைரஸ், கடுமையான மூளை காய்ச்சல் நோயாளிகளில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் ஆகியவை பொதுவாக கண்டறியப்பட்ட ஐந்து நோய் கிருமிகள் ஆகும்.
