புதுடெல்லி: இந்திய பயனாளர்களுக்கு சாட் ஜிபிடியின் கோ-1 சேவை ஒரு வருடத்துக்கு இலவசமாக அளிக்கப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய உலகில் தற்போது ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் ஓபன் ஏஐ நிறுவனம், கூகுளின் ஜெமினி, எக்ஸ் தளத்தின் க்ரோக் உள்பட ஏராளமான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சந்தையில் போட்டியிட்டு வருகின்றன. அதில் ஒன்றாக சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் கோ-1 இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாட் கோ- 1 என்பது அதிக தகவல்களை சேரிப்பது, புகைப்பட உருவாக்கம் மற்றும் கோப்பு பதிவேற்றங்களை வழங்குகிறது.இதற்கு மாதம் 399 ரூபாய் சந்தாவாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பயனாளர்களை கவரும் விதமான சாட் ஜிபிடி கோ-1 சந்தா சேவை ஓராண்டுக்கு இலவசமாக அளிக்கப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் இந்திய பயனர்கள் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளை இலவசமாக அணுக முடியும் என கூறப்படுகிறது.
+
Advertisement
